பெண்களின் கௌரவத்தினை பாதுகாக்க புதிய சமூகம் உருவாக்கப்பட வேண்டும்: கோட்டாபய

பெண்களின் கௌரவத்தினையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய சமூகமொன்றினை உருவாக்க வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (31) நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மகளீர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் பெண்களின் கௌரவத்தினை பாதுகாக்கும் வகையில் சமூகமொன்றினை கட்டியெழுப்பு வேண்டும். அத்துடன் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்போது முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

சிறுவர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக நிறைவுக்கு கொண்டு வர விசேட பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.