பாதாள குழுக்கள் இடையில் மோதல் : இருவர் வெட்டிக்கொலை!

கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது ஒரு முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடுத்த முச்சக்கர வண்டியில் வந்த இருவரை கத்திகளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதன்போது பாதாள உலகக்குழு உறுப்பினரான மட்டக்குழியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆனமாலு ரங்க மற்றும் 22 வயதுடைய சி.எச். இம்ரான் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.