ஆஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தை காப்பாற்ற முயற்சித்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கதி!

அவுஸ்திரேலியாவில் பிரியா - நடேசலிங்கம் மற்றும் அவர்களது பிள்ளைகளின் நாடு கடத்தலை தடுக்க முயற்சித்த இரு தமிழ் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்ற தயாராகிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மெல்பேர்ன் விமான நிலையத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு வேலி உடைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் அத்துமீறல், விமானத்தின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இரு பெண்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பெண்கள் சுமார் 60 ஆதரவாளர்களுடன் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். பெல்பேர்ன் விமான நிலையத்தில் உள்ள வேலியை மீறி விமான நிலையத்தின் பாதுகாப்பு கட்டுப்பாட்டு பகுதி சென்றுள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி இரவு இரு பெண்களும் கைது செய்யப்பட்டு அக்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். எனினும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் ஆணை வழங்கியுள்ளனர்.