இன்று கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சொகுசு படகுச் சேவை. (படங்கள் இணைப்பு)

கொழும்பு கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரையில் பேர வாவியில் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு சேவையில், பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கொழும்பு கோட்டையில் இருந்து கொப்பனி வீதிக்கு பஸ்ஸில் பயணிக்கும் போது சுமார் 30 நிமிடங்கள் எடுக்கும் நிலையில் இந்த படகுசேவையின் ஊடாக 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

கடற்படையினரின் பூரண பாதுகாப்பில் இந்த சேவை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த சேவையை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எ.எச்.எம் பௌஸி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானும் கலந்து சிறப்பித்தனர்.