ஈஸ்டர் பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!!

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான 14 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவானுமான பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது சந்தேக நபர்கள் 14 பேரினதும்  விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம்  திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-metronews