நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது நாட்டுக்கு ஆபத்து.! -அக்மீமன தேரர்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பதன் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்படுவதாகவும், இது நாட்டுக்கு ஆபத்தானது எனவும் அக்மீமன தயாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (30) யாழ்ப்பாணத்தில், இந்த அரசாங்கம் ஜனாதிபதி முறைமையை இப்போதாவது மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.