‘எனது பாதுகாப்பை அதிகரியுங்கள்’ : ஜனாதிபதியிடம் கோட்டாபய கோரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதிப்படுத்தினார்.

இருப்பினும் கோட்டாபாஷய ராஜபக்க்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அதனால்தான் அவர் தனது பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைய ஊடகங்கள் சிலவற்றில் தவறாக செய்திகள் பரப்படுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையிலேயே பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரியதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

-Metronews