ஜனாதிபதி வேட்பாராக கோத்தபாயவை பகிரங்கப்படுத்தினாலும், சிராந்தி ராஜபக்ஷயே தேர்தலில் களமிறங்குவார்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது  பல்வேறு குற்றசாட்டுக்கள் உள்ளன. அந்த குற்றசாட்டுக்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாராக கோத்தபாயவை அறிவித்திருந்தாலும் தேர்தல் நெருங்கியவுடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ரஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா கமகே தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று (20)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.