இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த சேவையை மீள ஆரம்பித்த போதும் நடைமுறை சிக்கல்களால் நிறுத்தப்பட்டது. எனினும் இதனை மீள நடத்துவதன் மூலம் பயணிகள் போன்று பொருட்களின் பரிமாற்றத்துக்கும் அத்தியாவசியமானதாக அமையும்.

அத்துடன் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தி அடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.