இன்டெர்போலின் உதவியை நாடும் மைத்திரி!

கொழும்பில் இன்றைய (27) தினம் இன்டர்போல் வழங்கிய பதக்கத்தை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்டர்போலின் உதவியை கோரியுள்ளார்.

வெளிநாடுகளில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் நிதி மோசடி குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்வதற்காகவே இவ்வாறு உதவி கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை விரைவாக கைது செய்வதற்காக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, படையினர் மற்றும் உளவுத்துறை பிரிவினர் எடுத்துள்ள நடவடிக்கைகளை இன்டர்போல் பொதுச் செயலாளர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.