இராணுவ தளபதி மஹேஷ் சேனநாயக்கவின் பதவி நாளை நிறைவு!

இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் (18) நிறைவு பெற உள்ளது.

அதனடிப்படையில் நாளை அவர் ஓய்வுபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அவரின் பதவிக்காலத்தை நீடிப்பதா அல்லது அவர் ஓய்வு பெறுவதா என்பத தொடர்பில் இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமாறு இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வருட பதவி நீடிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது