முற்றுகையில் சிக்கிய பொலிஸ் போலிச் சான்றிதழ்கள்!

பொலன்னறுவை பகுதியில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, போலியாகத் தயாரிக்கப்பட்ட  பொலிஸ் சான்றிதழ்கள் , கல்விச் சான்றிதழ்கள் , பரீட்டை பெறுபேற்றுச் சான்றிதழ்கள் , காணி அத்தாட்சிப் பத்திரங்கள் , சாரதி அனுமதிப்பத்திரங்கள் , வைத்திய சான்றிதழ்கள் , நீதிமன்ற ஆவணங்கள், கிராம சேவகரினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் சிக்கின.

மேலும் மரம் மற்றும் பலகை வியாபார அனுமதிப்பத்திரம் , வனவளம் சார்ந்த அனுமதிப் பத்திரங்கள் மற்றும் அரச , தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 86 இறப்பர் முத்திரைகள் மற்றும் 2 அச்சிடும் இயந்திரங்களும் கணணி ஆகியன கைப்பற்றப்பட்டன.

-metro