தவறுகளை திருத்திக் கொண்டு புதிய அரசியல் பயணம்! நாமல் ராஜபக்ஷ உறுதி!

கடந்த காலத்தில் கற்ற பாடங்களின் அடிப்படையில் தவறுகளை திருத்திக் கொண்டு புதிய அரசியல் பாதையில் பயணிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரை இன்று அறிவித்ததன் பின்னர் தவறுகளை திருத்திக் கொண்டு நாளை முதல் புதிய அரசியல் பாதை ஒன்றில் பயணிக்கவுள்ளோம்.

எமது அரசியல் பயணத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்களை முன்னைய அரசு செய்தது. ராஜபக்ச குடும்பத்தினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மக்கள் அறிவார்கள் என்றார்.