ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லிம்களை அழைத்து அரசியல் செய்கின்றனர்; ஏன் எம்மால் முடியாது - ஞானசார தேரர்!!


நாட்டில் தற்கொலை குண்டுதாரிகள் இன்னும் அறுபது தொடக்கம் எழுபது பேர்வரை வெளியில் உள்ளதாக பொதுபலசேனாவின் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கினிகத்தேன விகாரை ஒன்றுக்கு வருகை தந்து கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த தேரர் கூறியதாவது, 50 ற்கும் மேற்பட்ட விகாரைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளவிருப்பதாக எமக்கு 2010ம் ஆண்டு தகவல் வந்தது அந்த காலபகுதியில் அனைத்து இடங்களுக்கு நாம் தகவல் வழங்கினோம் .

இது போன்ற குண்டுதாக்குதலின் முலமாக எமது சமுகம் எமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் இல்லாமல் போய்விடும். ஆகையால் தான் எமது மக்களை நாம் விகாரைகளுக்கு அழைத்து தெளிவுபடுத்துகிறோம். நாங்கள்
மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் எவராலும் கேள்வி எழுப்பமுடியாது. எமக்கு தற்பொழுது அபிவிருத்தி என்பது முக்கியம். ஆகையால் நாம் பொதுபலசேனாவை பலபடுத்த வேண்டும்.

முஸ்லிம் மதத்தலைவர்கள் முஸ்லிம் மக்களை பள்ளிவாசல்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அழைத்து அரசியல் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வார்களானால் அதே ஏன் எம்மால் முடியாது, எனவும் அவர் குறிப்பிட்டார்.

-எஸ்.சதீஸ்-