சூடு பிடித்தது போட்டி; ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் அநுர குமார திசாநாயக்க!!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஜே.வி.பி தலைமையிலான ‘தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின்’ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி தமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை 20 வருடங்களுக்கு பின்னர் அறிவித்துள்ளது.

1999 ஆம் ஆண்டு நந்தன குணதிலக்க கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுடன் தேர்தலில் மூன்றாமிடத்தை பெற்றார்.

2005 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கும்,
2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவுக்கும் ஆதரவளித்த மக்கள் விடுதலை முன்னணி, 2015 இல் தமது கட்சி சார்பில் எந்த வேட்பாளரையும் பிரேரிக்கவில்லை. அத்துடன் ஊழலுக்கு எதிரான சித்தாந்தத்தை மக்கள் மயப்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டது.

இதற்கிணங்க 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் களத்துக்குள் இன்று அனுர குமார திசாநாயக்க பிரவேசித்துள்ளார்.