நாட்டுக்காக தியாகம் செய்ய தயார்!

எத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும் நாட்டுக்காக முன்னோக்கிச் சென்று எனது உயிரை தியாகம் செய்தாவது நாட்டை பாதுகாப்பதற்கு தான் அர்ப்பணித்திருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் நேற்றைய தினம் முதன்முறையாக கண்டி தலதாமாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அவர் அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டார்.