எந்தவொரு சவால்களையும் முறையடிக்க நாம் தயார் - பிரதமர்

நாட்டை அபிவிருத்தி செய்யும் போது எதிர்கொள்ளும் எந்தவொரு சவால்களையும் முறியடிக்க தமது அரசாங்கம் தயார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று தந்திரிமலை நீர்த்தேக்கத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் ஊடாக சர்வதேசத்துடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடனில் தங்கியிராமல், நாட்டை செல்வந்த நாடாக மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)