சவேந்திரா சில்வா நியமனம் தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி!

இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசேட அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் அவருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பலமாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

குறிப்பாக, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமானதாக காணப்படும் இந்த தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பு, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை குறைத்து மதிப்பிடும் ஒரு நடவடிக்கையாக அமைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.