டாக்டர் சிவரூபனின் தகவல்களுக்கு அமையவே பளை வெடிபொருட்கள் மீட்பு – திட்டமிட்ட சதியா ?

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு கொண்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகியுள்ள கிளிநொச்சி – பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில், அவரால் மறைத்து வைக்கப்பட்டவை என்று கருதப்படும் ஆயுத மற்றும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பளை – கரண்டாய் பிரதேசத்தில் வைத்து இவை மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏ.கே.47 துப்பாகி ஒன்றும், அதற்கான மெகசின்கள் இரண்டும், 120 தோட்டாக்கல் மற்றும் 11 கைக்குண்டுகளும், பீ.யி.10 ரக வெடிபொருட்கள் 10 கிலோவும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையக் கடந்த 19ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சீவரூபன் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் இது ஒரு திட்டமிட்ட நாடகம் என தமிழ் அரசியல் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.