சவேந்திரா சில்வா நியமனத்துக்கு சுமந்திரன் கண்டனம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய இராணுவத் தளபதி குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்தப் பதிவை இட்டுள்ளார்.

பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவருக்கு இந்த பதவியை வழங்குவது தமிழ் மக்களை அவமரியாதை செய்யும் செயல் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.