ஶ்ரீ.சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுன இடையேயான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இன்று

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று(27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் புதிய உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.