நாட்டின் பெரும்பாலான இடங்களில் அசாதாரண காலநிலை

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் திடீரென அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும், இது குறித்து அடுத்த 36 மணி நேரத்திற்குள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடைக்கிடையே பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அம்பகமுவ, கொத்மலை, நுவரெலிய பிரதேசங்களுக்கு நிலசரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் கூறியுள்ளது