சஜித் பிரேமதாச திருடன் இல்லை – மைத்திரிபால சிறிசேன புகழாரம்!

சஜித் பிரேமதாச என்பவர் அரசியலில் ஒரு திருடரோ, ஊழல் வாதியோ அல்லவெனவும், இந்த நற்சான்றிதழை தான் அவருக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்று (18) வீடமைப்புத் திட்டமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக களமிறங்கும் வேட்பாளர்கள் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதாகவும் உறுதிமொழியளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் குறிப்பிட்டார்.