ஐ. தே. க ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இல்லை!

மக்கள் வங்கியை தனியார் மயமாக்குவதற்கான ஒரு செயல்முறை இருப்பதாக சோசலிச மக்கள் முன்னணி கூறியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவா நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என சிலரால் அழைக்கப்படும் அமைச்சர் சஜித் பிரேமதாச, இந்த விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

நிதி மையத்தை தனியார் மயமாக்குவது பொருளாதார இரும்பு கதவை உடைப்பதற்கு சமமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஆசியாவின் பொருளாதாரம் சரிந்தது ஆனால் இதனால் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. அதற்கு அந்த நேரத்தில் பொருளாதாரம் வலுவதாக காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ரூபாவின் மதிப்பு குறைவடைந்ததால் அரசாங்கம் ஆயிரத்து 760 மில்லியன் ரூபா கடனை எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்த நிதியின் மூலம் நாட்டில் பல துறைமுகங்களை அமைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் மந்தகதியில் நிலவியதால் இலங்கை வங்கியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பி எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் எனவும் அதற்கமைய எதிர்காலத்தில் நாட்டில் பாரிய புரட்சி ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, பொதுஜன முன்னணியின் ஆதரவு இல்லாமல் முன்நோக்கி பயணிக்க முடியாது என கூறிய அவர், அதனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.