சஜித் இற்கே பாராளுமன்றத்தில் அதிக செல்வாக்கு!

நாட்டிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் 123 பேரில் 97 பேர் நேற்றிரவு நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகவும், அனைவரும் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்ததாகவும் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

களநிலவரம் குறிப்பிடும் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத சிலரும் கட்சியில் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.