ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் - தயாசிரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சக்திவாய்ந்ததாக வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சி சக்திவாய்ந்ததாக வேண்டுமாயின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்றாம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.