ஜே.வி.பி க்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க!

திருடர்களை பிடிப்பதற்கு தகுதியான நபர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைகளுக்காக இன்று உயர் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது செய்தியாளர்களிடம் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலை மக்கள் புரிந்துக்கொள்ள முடியாது. மக்கள் மத்தியில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் திருடர்கள் என்பதாலேயே மக்கள், மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிப்பதில்லை.

யார் ஆட்சிக்கு வந்தாலும் திருடர்களை பிடிக்க போவதில்லை. ஆட்சிக்கு வருபவர்கள் ஒவ்வொருவரின் நண்பர்கள். இதனால், யார் ஆட்சிக்கு வந்தாலும் திருடர்களை பிடிப்பது என்பது மக்களுக்கு கனவாகவே இருக்கும். மேடைகளில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டாலும் அவர்கள் நல்ல நண்பர்கள் என ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.