இனி புகையிரதங்களில் அருவக்கலுவிற்கு குப்பைகள் எடுத்துச் செல்லப்படும்!

கொழும்பு நகர எல்லையிலிருந்து அருக்கலு குப்பை செயற்திட்டத்திற்கு புகையிரதம் மூலம் கொண்டு செல்லும் பைலட் திட்டம் சனிக்கிழமை தொடங்கும் என்று ரயில்வே பொது மேலாளர் திலந்தா பெர்னாண்டோ தெரிவித்தார்.

புகையிரத நிலையத்தில் இருந்து இரண்டு குப்பை ஏற்றும் வாகனங்கள் ரயிலில் ஏற்றப்பட்டு, இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த திட்டம் வெற்றிகரமாக நடந்தால், குப்பை ரயிலிலே கொண்டு செல்லப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.