பளை வைத்தியசாலையின் வைத்தியரை விடுவிக்குமாறு போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.

பளைப் பிரதேச மக்களால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

பளை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நடை பவனியாக பளைப் பிரதேச செயலகம் வரை சென்றதுடன் அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலக அதிகாரியிடம் கையளித்தனர்.