சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

குறைபாடுகளுடன் கூடிய விண்ணப்பங்கள் பலவற்றுக்கு மாத்திரம் அடையாள அட்டை விநியோகிக்கப்படும்.

இவை பாடசாலை அதிபர்களின் ஊடாக சரி செய்து கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.