கடற்கரைகளை பாதுகாக்க நடைமுறைபடுத்தும் புதிய நடவடிக்கை!

கடற்படையினரின் பாதுகாப்பு முயற்சியால் தீவைச் சுற்றி உள்ள அழகிய கடற்கரை கடலோரப் பாதையை சுத்தம் செய்யும் திட்டம் அண்மையில் வடக்கு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குருநகர் கடற்கரை பகுதியை சுத்தம் செய்வதற்காக வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் கபிலா சமரவீரவின் உத்தரவின் பேரில் வடக்கு கடற்படை கட்டளை, யாழ்ப்பாண பிரதேச செயலகத்துடன் இணைந்து குறித்த துப்புரவு நடவடிக்கையினை மேற்கொண்டது.

யாழ்ப்பாண பிரதேச செயலக அதிகாரிகள், இளவலை கல்லூரி மாணவர்கள், கஜபா ரெஜிமென்ட்டின் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைந்த கடற்படை வீரர்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன் அடிப்படையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் பசுமை நீல கருத்தின் கீழ் ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் கடற்படை வீரர்கள் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.