இன்று அறிமுகமாகின்றார் கோட்டா: தடல் புடல் ஏற்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பதை இன்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தவுடன் நாட்டிலுள்ள 14,500 கிராம சேவக பிரிவுகளிலும் இந்த சந்தோசத்தினை பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) பொறுபேற்கும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்பொழுது செய்யபட்டுள்ளன.

இந்த சந்தோசத்தைக் கொண்டாட அனைவருக்கும் நாங்கள் அழைப்பினை விடுக்கின்றோம். இன்று இடம்பெறவிருக்கின்ற நிகழ்விற்கு, தேசிய கொடியினை ஏந்தியவாரு பாற்சோறு மற்றும் இனிப்பு பண்டங்கள் சமைத்து அனைவரையும் இந்த சந்தோசத்தினை பகிர்ந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டு கொள்கின்றோம் எனவும் நாவலப்பிட்டிய கட்சிக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.