மக்கள் விடுதலை முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு!

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இன்று மாலை காலி முகத்திடலில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

20 வருடங்சகளின் பின்னரே இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்படவுள்ளார்.

1999 ஆம் ஆண்டு நந்தன குணதிலக மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டிருந்தார்.

அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டு மஹந்த ராஜபக்ஷவிற்கும், 2010 ஆம் ஆண்டு சரத் பென்சேகாவிற்கும் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவிற்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியிருந்தது.