கோத்தபாயவின் இரட்டைப் பிரஜாவுரிமை சர்ச்சைக்கு இன்று தீர்வு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு குறித்து ஆணைக்குழு இன்று ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் கடவுச்சீட்டின் உண்மைத் தன்மை மற்றும் இலங்கை பிரஜாவுரிமை குறித்து ஆணைக்குழு ஆராயவுள்ளது.

அவர் குறித்த முறைப்பாடொன்று தமக்குக் கிடைத்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளருக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டிருப்பதுடன் இன்று இது பற்றி ஆராயப்படும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.