கோத்தாபய சிக்கலில் மாட்டிக்கொள்வாரா? – சிஐடி விசாரணை மீண்டும் ஆரம்பம்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஸவின் கடவுச் சீட்டு தொடர்பான விசாரணை பதில் பொலிஸ் மா அதிபரினால் மீண்டும் ஒருமுறை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தாபய ராஜபக்ஸவுக்கு வெளிநாட்டுப் பிரஜாவுரிமை உள்ள நிலையில், கடவுச் சீட்டு பெறப்பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடொன்று பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இது குறித்து விசாரணை நடாத்துவதற்கு ஆரம்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த விசாரணையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நீக்கிக் கொண்டு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர், மீண்டும் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.