மலையகப் பகுதியில் தீ - பல ஆயிரத்திற்கு மேற்பட்ட உபகரணங்கள் எரிந்து நாசம்!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ லொய்னோன் தோட்ட பகுதியில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயினால் குறித்த குடியிருப்பு பகுதி அளவில் சேதமடைந்துள்ளதோடு, சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் தீயில் கருகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (23) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

குடியிருப்பில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தோட்ட பொது மக்கள் இனைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு, சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச சபை அம்பகமுவ பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு மலையக மக்கள் முண்ணனியின் மத்திய குழு உறுப்பினரும் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ. உதயகுமார் அறிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.