நாய்களின் சண்டையாக மாறியுள்ள ஜனாதிபதி தேர்தல்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் அனைத்து பிக்குமார்களும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைய வேண்டும் என பெவிதி ஹன்ட அமைப்பின் ஏற்பாட்டாளர் வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டவில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே ஆனந்த தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தல் நாய்கள் சண்டையாக மாறியுள்ளதாக அவர் இதன்போது அவர் தெரிவித்தார்.

நாட்டிற்காக ஏதேனும் செய்த தலைவரின் அவசியத்தை உணர்ந்திருப்பதாகவும், அதன் காரணமாக ஒழுக்கமிக்க ஆட்சியாளர் ஒருவர் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்தார்.