முஸ்லிம் பெண்களின் திருமணம், விவாகரத்து தொடர்பிலான யோசனைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது!

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்தல் தொடர்பில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மற்றும் அதற்கான திருத்தத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தில் சில விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு செயல்பாட்டாளர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக திருமணம் செய்யப்பட வேண்டிய வயது பதிவு செய்யும் நடைமுறை மற்றும் திருமணம் செய்தலுக்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு அமைவாக விதிகள் முதலான விடயங்களில் திருத்தத்தை மேற்கொண்டு அதன் திருத்த சட்ட மூலத்திற்கான யாப்பு திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்கு சட்டவரைவுக்கு அது தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக தபால் சேவை மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர், நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.