போஹம்பர சிறைச்சாலை வளாகத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு

போஹம்பர சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வளாகத்தை நவீனமயப்படுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதை மக்கள் உரிமைக்கு வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளும் ஆரம்பிக்கப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. முதற்கட்ட பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இதேவேளை போஹம்பர சிறைச்சாலையிலிருந்த கைதிகள் பல்லேகல பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். பழமைவாய்ந்த போஹம்பரை சிறைச்சாலை நவீனமயப்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.