குப்பைகளைக் கொண்டுச் சென்ற டிப்பர் வாகனங்கள் மீது தாக்குதல்!

கொழும்பிலிருந்து அருவாக்காடு பிரதேசத்துக்குக் குப்பைகளை ஏற்றிச் சென்ற, டிப்பர் வாகனங்கள் மீது கல்லெறிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை, 1 மணிக்கு புத்தளம்- மன்னார் வீதியில் வைத்து, இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

3 டிப்பர் வாகனங்கள் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.