அகில தனஞ்சய மற்றும் கேன் தவறான முறையில் பந்தினை எறிகின்றார்கள் - ஐ.சி.சி

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய மற்றும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தவறான முறையில் பந்துவீச்சு செய்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

அதனடிப்படையில், 14 நாட்களுக்குள் அவர்கள் பந்துவீச்சு நிலைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகுதான் நடுவர்கள் இவர்களின் பந்துவீச்சில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.