ரணிலுக்கு 75 மில்லியன் வழங்கியது யார்? பரபரப்பு தகவல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸினால் வழங்கப்பட்ட பெருந்தொகையான நிதி குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணிலின் சொந்த வீட்டிற்குச் சென்று சுமார் 75 மில்லியன் ரூபாவை வழங்கியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கள நாளிதழான மவ்பிம பத்திரிகை இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.