பெண்கள் என்று கூறி விபச்சாரத்தில் ஈடுபட்ட 7 ஆண்கள் கைது!

பெண்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 7 பிலிப்பைன்ஸ் ஆணகளையும் ஒரு உக்ரைன் பெண்ணையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் உளவுப் பிரிவு கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் வைத்து இவர்களை இன்று கைது செய்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊடகப் பேச்சாளர் பி.ஜீ. கயான் மிலிந்த தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி முதல் சில நாட்களுக்குள் சலுகையாக அறிவிக்கப்பட்ட இலவச வீசா முறைமையை பயன்படுத்தி இவர்கள் இலங்கைக்குள் நுழைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.