600 பொலிஸார் கொலையில் கருணா ஈடுபாடு? அம்பலப்படுத்திய பொன்சேகா!

ஒருவர் தனது தந்தையின் பெயரை தேர்தல் மேடையில் பயன்படுத்த முயற்சிக்கிறார். உண்மை என்னவென்றால், அவரது தந்தை கொடுத்த ஆயுதங்களைப் பயன்படுத்தியே, புலிகள் இலங்கை இராணுவத்தை தாக்கினர் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்நதும் தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று நான் கூறவில்லை. மக்கள் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுன அதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

அண்மையில் நடந்த பேரணிகளில், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தயாராக இருப்பதாக இரண்டு பேர் கூறினர்.

ஒருவர் தனது தந்தையின் பெயரை தேர்தல் மேடையில் பயன்படுத்த முயற்சிக்கிறார். உண்மை என்னவென்றால், அவரது தந்தை கொடுத்த ஆயுதங்களைப் பயன்படுத்தியே, புலிகள் இலங்கை இராணுவத்தைத் தாக்கினர்.

600 பொலிஸ் அதிகாரிகளை விடுதலைப் புலிகள் மற்றும் கருணாவிடம் சரணடைய உத்தரவிட்டது அவரது தந்தை தான்.

அந்த பொலிஸ் அதிகாரிகளை கொன்றவர் மற்ற அரசியல் முகாமில், ஒரு மலர் மொட்டை கையில் ஏந்தியபடி இருந்தார்.

ஐதேக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக, கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டால், கட்சியின் அந்த முடிவுக்கு இணங்குவேன். நான் ஒரு ஒழுக்கமான நபர், கட்சி மற்றும் அதன் தலைவரின் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன் என குறிப்பிட்டுள்ளார்.