பாராளுமன்றத்தில் வழுக்கி விழும் சம்பவங்கள் அதிகரிப்பு – 24 பேர் காயம்!

பாராளுமன்ற கட்டிடத்திலுள்ள தரைப் பகுதியை சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தவறான பொருட்களினால் ஏற்படும் நழுவல் நிலைமையினால் இதுவரை 24 பேர் வழுக்கி வீழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு வீழ்ந்தவர்களுள் ஆறு எம்.பி.க்கள், 14 பெண் ஊழியர்கள் மற்றும் நான்கு வெளி நபர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது.

வீழ்ந்தவர்களில் சிலர் பாராளுமன்ற மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தின் இந்த வழுக்கும் தன்மை கடந்த 20 ஆம் திகதி முதல் நான்கு நாட்களாக இருந்து வருவதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.