2010 மற்றும் 2015 ஆண்டுகளில் முட்டாள் தனமான வேலைகளை செய்தோம்.! -அமைச்சர் தலதா அத்துகோரள

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவது உறுதி என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கம்பெரலிய திட்டத்தின் மூலம் சுமார் 48000 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பலங்கொட மேல் தஹமான வீதியை திறந்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தலதா அத்துகோரள, பல சிரமங்களுக்கு முகம்கொடுத்தே நாம் இந்த அரசாங்கத்தை அமைத்தோம். ஆட்சியமைத்து மூன்று மாதங்களில் குப்பை மேடு சரிந்து விழுந்தது. அதேபோல் கடந்த வருடம் மஹிந்தவை பிரதமராக்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி செய்த ஜனநாயக விரோத செயற்பாடு இடம்பெற்றது.

எனவே, இனிமேல் வேறு வெளிநபர் ஒருவருக்கு வாக்களிக்க போவதில்லை. 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் முட்டாள் தனமான வேலைகளை செய்தோம். ஆனால் இந்த முறை நாம் சஜித் பிரேமதாஸவை எப்படியாவது கொண்டு வருவோம். அதுதொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம். காரணம் பிரதமர் நல்லவர்.

அவரின் முதிர்ச்சிமிக்க தலைமைத்துவத்தை நாம் மதிக்கின்றோம். பிரேமதாஸ தான் துன்புற்றவர்களை தேற்றி ஏழை எழியவர்களுக்கு உதவி செய்தார். அவரின் நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கின்றேன் என்றார்.