100 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; கணவனும், மனைவியும் மரணம்!

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா, உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்டம் "ஐஸ் பீலி" என்றழைக்கப்படும் இடத்தில், சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (17) இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, உயிரிழந்ததாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

வலப்பனை - மந்தாரநுவர - எலமுல்ல பிரதேசத்தைச்  டி.பி.ரூபசிங்ஹ (வயது 50) ரோஹினி  குமாரி (வயது 45) ஆகியோரே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்விருவரும் கணவன், மனைவியென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

-Jaffna Muslim