கிளிநொச்சியிலும் பணிப்பகிஷ்கரிப்பில் குதித்த ஆசிரியர்கள்!


நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பில் கிளிநொச்சி பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆசிரிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் கிளிநாச்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.பாடசாலைகளிற்கு மாணவர்கள் வழமைபோல் வருகை தந்திருந்த நிலையில் குறித்த போராட்டம் சுமார் அரை மணிநேரம்

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் சார்பில் கருத்து வெளியிடும் போது, எமது பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்த ஹர்த்தால், பாடசாலை விடுமுறை நாட்களை கருத்தில்கொண்டும், மணவர்களின் கல்வி, பரீட்சைகளை கருத்தில்கொண்டும், வடக்கு கிழக்கு பகுதிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களான நாம் போராட்டத்தை அரை மணிநேரமாக மட்டுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

இன்று பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கம் மிகவும் மோசமாக உள்ளது. ஆசிரியர்களிற்கு வழங்கப்படும் கடமைகளில், மேலதிகமாக எழுத்து வேலைகளும் அதிகமாக வழங்கப்படுகின்றது. வெளிநாடுகளை போல் அல்லாது எமது கல்வி கற்பிக்கும் செயற்பாடானது மிகவும் மோசமாக உள்ளது.

வெளிநாடுகளில் ஆசிரிய துறையை தேடி பலரும் விரும்பி செல்கின்றனர். இலங்கையில் ஆசிரியர் துறையிலிருந்து பலரும் விலகி வேறு வேலைகளை நோக்கி செல்கின்றனர். இவ்வாறன நிலை மாற்றப்பட்டு, சீரான கல்வி செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.