ருஹுனு குமாரி ரயிலுடன் காரொன்று மோதி ஒருவர் பலி!

மாத்தறை – பம்பரன அபேகுணவர்தன மாவத்தையின் ரயில் குறுக்கு வீதியில், ருஹுனு குமாரி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த 53 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

அவ் இருவரும் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காரில் பயணித்துள்ளதுடன், சமிக்ஞை ஒலித்தபோதிலும் காரை ரயில் பாதையூடாக செலுத்துவதற்கு முற்பட்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.