மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர் - மகிந்த ராஜபக்ஷ

2019 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

2019 வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்த சலுகையையும் வழங்கவில்லை விரைவில் அவர்கள் அதன் விளைவுகளை சந்திப்பார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கனி தியேட்டரில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிக்காமல் நேற்று சேம்பரை விட்டு வெளியேரியது வருந்தத்தக்கது என கூறினார்.